தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5013


மண்     நசை - இருபெருவேந்தர்க்கும்  இடையீடாகிய மண்ணிடத்து
வேட்கையானே;  அஞ்சுதகத் தலைச்சென்று - ஆண்டு வாழ்வோர்க்கு
அஞ்சுதலுண்டாக  அந்நாட்டிடத்தே  சென்று;  வேந்தனை  வேந்தன்
அடல்  குறித்தன்று - ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல்
குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை எ-று.

ஒருவன்     மண்ணசையான்     மேற்சென்றால்     மற்றவனும்
அம்மண்ணழியாமற்   காத்தலுக்கு  எதிரே  வருதலின்,  இருவர்க்கும்
மண்ணசையான்   மேற்சேறல்  உளதாகலின்,  அவ்விருவரும்  வஞ்சி
வேந்த   ராவரென்றுணர்க.   எதிர்சேறல்   காஞ்சி  என்பராலெனின்,
காஞ்சியென்பது   எப்பொருட்கும்  நிலையாமை  கூறுதலிற்  பெரிதும்
ஆராய்ச்சிப்படும்  பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை
யுணர்க.    ஒருவன்    மேற்சென்றுழி    ஒருவன்   எதிர்செல்லாது
தன்மதிற்புறத்து   வருந்துணையும்  இருப்பின்,  அஃது  உழிஞையின்
அடங்கும்.   அது   சேரமான்   செல்வுழித்  தகடூரிடை  அதிகமான்
இருந்ததாம்.  இங்ஙனம்  இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறும்
துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலா மென்றுணர்க.   (7)

வஞ்சி பதின்மூன்று துறைத்து ஆதல்
 

62.
இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல்
வயங்க லெய்திய பெருமை யானுங்
கொடுத்த லெய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின் றுய்த்த போராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
வொருவன் றாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சொற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:33:45(இந்திய நேரம்)