தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5040


றுந்     தோட்டியுங்   கதவும்   முதலியன   கோடல்  அகமிசைக்கு
இவர்ந்தோன்   பக்கத்தின்பாற்படும்.   படிவம்   முதலியன  கோடல்
குடுமிகொண்ட  மண்ணுமங்கலத்தின்பாற் படும்.  புறத்தோன் இருப்பிற்
றொகைநிலைப் பாற்படும். ‘துறையென மொழிப’ என எல்லாவற்றையுந்
துறையென்று  கூறுகின்றவர்  தொகைநிலை  யென்னுந்   துறையெனத்
தொகைநிலையை    விதந்தோதினார்,   அது   பலவாகாது  இரண்டு
துறைப்பட்டு   வேறு  வேறு  துறையாம்  என்றற்கு.  அது  தும்பைத்
தொகைநிலைபோல்    இருபெரு    வேந்தரும்   உடன்   வீழ்தலுஞ்
சிறுபான்மை  உளதாமென்  றுணர்க. எதிர்செல்லா தடைத்திருந்தோன்
புறப்பட்டுப்   படுதல்  சிறுபான்மையாதலின்,  இதனையும்  வேறொரு
துறையாக்கிப் பதின்மூன் றென்னாராயினார்.

உ-ம்

‘‘அறத்துறைபோ லாரெயில் வேட்ட வரசர்
மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க
ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங்
கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து’’

என வரும்.

இது   வேறு  வேறு  வருதலுஞ்  சிறுபான்மை.  இன்னுந்  ’துறை’
யென்றதனானே  புறத்தோன்  கவடிவித்துதலுந்  தொகை  நிலைப்பாற்
பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க.

அது, ‘‘மதியேர் வெண்குடை’’ என்னும் (392) புறப்பாட்டினுள்,

‘‘வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றென னாக’’

என வரும்.

‘ஒன்ற’ வென்றதனான்  அகத்தோன்  வாண்மண்ணுதல் சிறுபான்மை
என்று கொள்க.

இனி  மகண்மறுத்தோன் மதிலை முற்றுதன்  மகட்பாற் காஞ்சிக்கண்
அடங்கும்.    யானையுங்    குதிரையும்   மதிற்போர்க்குச்   சிறந்தன
அன்மையிற்  கொள்ளாராயினர். ஈரடியிகந்து  பிறக்கடி   யிடுதலுங்கேடு
என்று உணர்க.                                           (13)

தும்பை நெய்தலது புறனாதல்
 

69.
தும்பை தானே நெய்தலது புறனே.
 

இது     தும்பைத்திணை      அகத்திணையுள்    இன்னதற்குப்
புறனாமென்கின்றது.   இதுவும்   மைந்து  பொருளாகப்  பொருதலின்
மண்ணிடையீடாகப்  பொரும்  வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும்
உழிஞைக்கும்பிற் கூறினார்.

(இ-ள்.) தும்பைதானே நெய்தலது புறனே - தும்பை யென்னும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:38:58(இந்திய நேரம்)