தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5042


அகல     நின்று   அம்பானெய்தும்  வேல்கொண்டெறிந்தும்   போர்
செய்ய,    அவ்வம்பும்   வேலும்   ஒன்றோடொன்று    துணையாகத்
தீண்டுமாறு செறிதலின்; சென்ற உயிரின் நின்ற யாக்கை.  சிறிதொழியத்
தேய்ந்த  உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருநிலந் தீண்டா
யாக்கை  அருநிலை  வகையோடு  - வாளுந் திகிரியு  முதலியவற்றான்
ஏறுண்ட   தலையேயாயினும்  உடலேயாயினும்  பெரிய   நிலைத்தைத்
தீண்டாதெழுந்து  ஆடும்  உடம்பினது  பெறற்கரு  நிலையுடைத்தாகிய
கூறுபாட்டோடே   கூடி;   இருபாற்பட்ட  ஒரு  சிறப்பின்று.  இரண்டு
கூறுபட்ட     ஒரு    சிறப்பிலக்கணத்தை    யுடைத்து    முற்கூறிய
தும்பைத்திணை எ-று.

எனவே,  முற்கூறிய   மைந்துபொருளாகப்  பொருதலினும்  நின்ற
யாக்கை  சிறத்தலும்  இருநிலந்  தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங்
கூறினார்.  இது  திணைச்  சிறப்புக்  கூறியது. மொய்த்தலி னென்றது,
யாக்கை   யற்றாட   வேண்டுதலிற்,   கணையும்  வேலுமன்றி  வாள்
முதலியனவும் ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும்
ஊருமாறு    போல்,   அலீகன்இற   அற்றுழியும்   உடம்பாடுதலின்,
அட்டையாடலெனவும் இதனைக் கூறுப.

இனி   மேற்றுறை   கூறுகின்றது   மைந்துபொருளாக   வந்ததுஞ்
சென்றதுமாகிய    பொது   இலக்கணத்திற்கே   என்றுணர்க.   நிரை
கொள்ளப்பட்டோன்  பொருகளங்  குறித்துப்  போர்செய்தலும் அவன்
களங்குறித்தது  பொறாது  நிரைகொண்டானுங்  களங்குறித்துப்  போர்
செய்தலும்  வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சியுள்ளும்  விழுப்புண்
பட்ட  வீரரை  நோக்கி  வேந்தற்குப்  பொறாமை  நிகழ்ந்து துறக்கம்
வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம்.  முற்றப்
பட்டோனை  முற்று  விடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி, அவன்
புறம்போந்து   களங்குறித்துப்   போர்செய்யக்   கருதுதலும்,  அவன்
களங்குறித்துழிப்    புறத்தோனும்    களங்குறித்துப்    போர்செய்யக்
கருதுதலும்    உழிஞைப்புறத்துத்    தும்பையாம்.    இவையெல்லாம்
மண்ணசையும்  அரண்கோடலுமின்றி  மைந்து  பொருளாகச்  சென்று
துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று.

மேற்காட்டுந்  துறைகளெல்லாம்  இச்சூத்திரத்துக்கூறிய  இரண்டற்கு
மன்றி, மைந்து பொருளாயதற்கேயா மென்றுணர்க.

உதாரணம்:-

‘‘நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே’’     (புறம்.297)

‘‘எய்போற் கிட
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:39:22(இந்திய நேரம்)