தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5045


பை மலைந்தான்றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து’’    (புற. வெ. தும்பை.1)

இது பூக் கூறியது.

இதனைத் திணைப்பாட்டு மென்ப.

‘‘வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையுங்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
பன்மணிப் பூணான் படைக்கு.’’      (புற. வெ. தும்பை.2)

இது சிறப்புச் செய்தது.

‘‘வயிர்மேல் வளைநரல வைவேலும் வாளுஞ்
செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - யுயிர்மேற்
பலகழியு மேனும், பரிமான்றேர் மன்னர்க்
குலகழியு மோர்த்துச் செயின்’’       (புற. வெ. தும்பை.4)

இது விலக்கவும் போர் துணிந்தது.

‘‘மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை
யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி - னென்னாங்கொ
லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப்
பாழித்தோண் மன்னர் படை’’       (புற. வெ. தும்பை.5)

இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது.

‘‘கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலு
மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை
சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார்
மறுவந்தார் தத்த மனம்.’’

இது  பெருந்தேவனார்  பாட்டு;  (புறத்திரட்டு.அமர்  10)  குருக்கள்
தமக்குப் படைத் தலைவரை வகுத்தது.

இனிப் போர்த்தொழிலாற் றானைநிலை வருமாறு:

‘‘குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம்
விழாக்களம் போல மெய்ம்மலி யுவகையர்
ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின்
அழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரும்
நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத்
தாக்கிய விசையிற் சிதர்ந்துநிலம் படுநருந்
தகருந் தகருந் தாக்கிய தாக்கின்
முகமுகஞ் சிதர முட்டு வோரும்
முட்டியின் முறைமுறை குத்து வோருங்
கட்டிய கையொடு கால்தட் குநருங்
கிட்டினர் கையறத் தொட்டுநிற் போருஞ்
சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ்
சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ்
சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரும்
மல்லிற் பிடித்தும் வில்லி னெற்றியும்
ஊக்கியும் உரப்பியு நோக்கியு நுவன்றும்
போக்கியும் புழுங்கிய நாக்கடை கவ்வியும்
எயிறுடன் றிருகியுங் கயிறுபல வீசியும்
இனைய செய்தியின் முனைமயங் குநரும்
பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும்
அரசறி பெருமையும் உரைசெல் லாண்மையும்
உடையோ ராகிய படைகொண் மாக்கள்
சென்றுபுகு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:39:57(இந்திய நேரம்)