தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5067


‘‘கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து
மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிகடல்சூழ்
மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார்
புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து’’
                          
(புறத்திரட்டு.1347.அமர்.3)

இப் பாரதத்துள் அது காண்க.

ஒல்லார்நாணப்     பெரியவர்க்  கண்ணிச்  சொல்லிய  வகையின்
ஒன்றொடுபுணர்ந்து   தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் பகைவர்
நாணும்படியாக   உயர்ந்தோரான்  நன்குமதித்தலைக்  கருதி  இன்னது
செய்யேனாயின்    இன்னது   செய்வலெனத்   தான்   கூறிய  பகுதி
யிரண்டனுள்   ஒன்றனோடே   பொருந்திப்  பல  பிறப்பினும்  பழகி
வருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப்பலியானும்;

நாணுதலாவது     நம்மை  அவன்  செய்யாதே  நாம்  அவனை
அறப்போர்   செய்யாது   வஞ்சனையான்  வென்றமையான்  அவன்
தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல்.

உ-ம்:

‘‘எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல்
வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான் - றம்பி
புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா
னறவோன் மறமிருந்த வாறு’’

இப்  பாரதத்துள்  ஒருவன்  இன்னது  செய்வலென்று  அது  செய்ய
முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க.

‘‘இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்’’               (குறள்.779)

இதுவும் அது.

ஒல்லாரிடவயிற்   புல்லியபாங்கினும்  -   பகைவராயினும்   அவர்
சுற்றமாயினும்    வந்து    உயிரும்   உடம்பும்   உறுப்பும்போல்வன
வேண்டியக்கால்   அவர்க்கவை   மனமகிழ்ந்து   கொடுத்து    நட்புச்
செய்தலானும்;

உ-ம்:

‘‘இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி
மைந்தனை வெல்வான் வரங்கொண்டான் - றந்தநா
ளேந்திலைவேன் மன்னனே யன்றி யிதற்குவந்த
வேந்தனும் பெற்றான் மிகை’’

இப்  பாரதத்துப்  பகைவனாற் படுதலறிந்துந் தன் கவச குண்டலங்
கொடுத்தமை  கூறினமையிற்  புல்லியபாங்காயிற்று.  அது வீரம்பற்றிய
கருணையாகலின் வாகையாயிற்று.

இத்துணையு மறத்திற்குக் கூறியன.

பகட்டினானும்  மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்
-  எருதும்  எருமையுமாகிய  பகட்டினானும் யானையுங் குதிரையுமாகிய
மாவினானுங்     குற்றத்தினீங்குஞ்    சிறப்பினான்    அமைந்தோரது
கூறுபாட்டானும்;

இவற்றான்  உழவஞ்சாமையும்    பகையஞ்சாமையுமாகிய   வெற்றி
கூறினார். பக்கமென்றதனாற் புனிற்றாவுங் காலாளுந் தேருங் கொள்க.

உ-ம்:

‘‘யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தோ
ரேனை நிரையுடைய வேர்வாழ்நர் - யானைப்
படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:44:14(இந்திய நேரம்)