தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5072


மே’      (தொல்.  களவியல்  14)    என்ற   நான்குஞ்  சான்றோர்
இகழ்ந்தாற்போல   அறம்  முதலியவற்றது   நிலையின்மை  யுணர்ந்து
அவற்றை  அவர்  இகழ்தலானும், ‘ஏறிய மடற்றிறம்’ (தொல்.அகத்.51)
முதலிய  நான்குந்  தீய  காமமாயினவாறு  போல  உலகிய  னோக்கி
நிலையாமையும்  நற்பொருளன்றாகலானும்,   உரிப்பொரு ளிடைமயங்கி
வருதலன்றித்     தனக்கு    நிலமில்லாத    பெருந்திணை    போல
அறம்பொருளின்பம்     பற்றியன்றி     வேறுவேறு     நிலையாமை
யென்பதொரு  பொருளின்றாதல்  ஒப்புமையானும், பெருந் திணைக்குக்
காஞ்சி புறனாயிற்று. ‘கைக்கிளை முதலாப் பெருந் திணை யிறுவாய்’
(தொல்.  அகத்.  1)  ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்கு  இது
புறனாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமை யுணர்க.  இது  மேலதற்கும்
ஒக்கும்.                                                 (22)

காஞ்சித் திணைது பொதுவிலக்கணம்
 

78.
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
 
இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணம் கூறுகின்றது.

(இ-ள்.)    பாங்கருஞ்   சிறப்பின்  -  தனக்குத்  துணையில்லாத
வீட்டின்பம்  ஏதுவாக;   பல்லாற்றானும்.  அறம் பொருள் இன்பமாகிய
பொருட்பகுதியானும்   அவற்றுப்  பகுதியாகிய  உயிரும்  யாக்கையுஞ்
செல்வமும்  இளமையும்  முதலியவற்றானும்;  நில்லா  உலகம் புல்லிய
நெறித்து    -    நிலைபேறில்லாத   உலகியற்கையைப்  பொருந்திய
நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி எ-று.

எனவே, வீடுபேறு  நிமித்தமாகப்   பல்வேறு   நிலையாமையைச்
சான்றோர்  சாற்றுங்  குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்கு. துணை.

உலகிற்கு     நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட்பகுதி
ஏதுவாகக்     கூறினன்றி   உலகென்பதற்கு   வடிவு   வேறின்மையிற்
‘பல்லாற்றானு’மென்று    ஆன்    உருபு   கொடுத்தார்.   கெடுங்காற்
கணந்தோறுங்   கெடுவனவுங்  கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு
ஆறென்றார்.   நிலைபெற்ற   வீட்டினான்   இவற்றின்   நிலையாமை
யுணர்தலின்      வீடு     ஏதுவாயிற்று.    பல்லாற்றானுமென்றதனாற்
சில்லாற்றானும்  வீடேது  வாகலன்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாகலுங்
கொள்க. இஃது அறி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:45:12(இந்திய நேரம்)