தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5100


தான   -மேற்கூறி   நின்ற   தேவர்   பகுதிக்கண்ணதன்றி  அவரின்
வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது எ-று.

எனவே, உழிஞை முதலியபாடாண் கொற்றவள்ளை நற்கிளைஞருங்
கூளிச்சுற்றமும்  ஒன்றனை நச்சிப் புகழாதே வாளா கூறுதலும், ஈண்டுக்
கூறுகின்ற  கொற்றவள்ளை  புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய
ஏழனானும்   புகழ்ந்துரைத்தலுமாயிற்   றாதலிற்   ‘படையியங்கரவம்’
(தொல்.புறம்.3) முதலாக வஞ்சியிற் ‘குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை’
யீறாகக்   கிடந்த   பொருட்   பகுதியெல்லாம்  பாடாண்டிணையாகப்
பாடுங்கால்  மக்கட்கே  யுரிய  என்பதூஉம், உழிஞை முதலியவற்றைப்
பாடாண்டிணையாகப்  பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப
உரியவென்பதூஉங்   கூறுதலாயிற்று.  என்னை?  அரசியலாற்  போர்
குறித்து  நிரைகோடலும்  மீட்டலும்  மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க்
கேலாமையாயினும்,    அவுணரான்    முற்றப்பட்ட    துறக்கத்தினை
அகத்துழிஞை   யரணாக்கி   மனுவழித்  தோன்றிய  முசுகுந்தனோடு
இந்திரன்  காத்தாற்  போல்வனவும்  பிறவுந்  தேவர்க்குக் கூறுதலான்
அவரும்    மதில்   முற்றியவழிப்   போர்   தோன்றுதலும்   ஆண்
வென்றியெய்துதலும் உடையராதலின் பாடாண்பொருட்கும் உரியாரென
நேர்பட்டது.

இச்சூத்திரம்     மக்கட்கெய்திய   பொருண்மையை  மீட்டுங்கூறி
நியமித்ததாம்;  ஆகவே,  வெட்சி  முதல்  வஞ்சியிற் கொற்றவள்ளை
ஈறாய   பொருண்மை   உழிஞைமுதற்   பாடாண்டிணைக் குரியராகி
இடைபுகுந்த   தேவர்க்   காகாவென  விதிவகையான்  விலக்கியதாம்.
ஆகவே,தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்பதூஉங்
கூறினாராயிற்று.

கொடிநிலை   முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப்  பட்டாரை
அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க.

உ-ம்:

‘‘மாவாடியபுலம் நாஞ்சிலாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:50:41(இந்திய நேரம்)