தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5103


ழ்த்தும்     - தலைவனெதிர்   சென்று  ஏறி  அவன் செய்தியையும்
அவன்  குலத்தோர்  செய்தியையும்  அவன்மேலே  ஏற்றிப் புகழ்ந்த
இயன்மொழி வாழ்த்தும்;

என்றது,       இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம்      இக்குணங்கள்
இயல்பென்றும்,  அவற்றை  நீயும்  இயல்பாக  உடையை   யென்றும்,
அன்னோர்  போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும் உயர்ந்தோர்
கூறி  அவனை  வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை
உம்மைத்தொகையாக்கி  இயன்மொழியும் வாழ்த்துமென இரண்டாக்கிக்
கொள்க.

இஃது    ஒருவர் செய்தியாகிய   இயல்பு கூறலானும்   வண்ணப்
பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று.

உ-ம்:

‘‘மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
யறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
யதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குரிசினீ யீங்கிது செயலே’’         (புறம்.50)

இவை போல்வன வெல்லாம் இயன்மொழி.

‘‘மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக்
கடல்போ றானைக் கடுங்குரல் முரசங்
காலுறு கடலிற் கடிய வுரற
வெறிந்து சிதைந்தவாள்
இலைதெரிந்த வேல்
பாயந்தாய்ந்த மா
வாயந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையாது
ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
விலங்கு கதிர்த்திகிரி முந்திசி னோரே’’    (பதிற்றுப்.69)

இது முன்னுள்ளோர்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:51:15(இந்திய நேரம்)