Primary tabs

தடாரி
யூன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி
விரல்விசை தவிர்க்கு மரலைப் பாணியின்
இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு
தெருமர லுயக்கமுந் தீர்க்குவ மதனா
னிருநிலங் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச்
சேயை யாயினு மிவணை யாயினு
மிதற்கொண் டறிநை வாழியோ கிணைவ
சிறுநனி, யொருவழிப் படர்கென் றோனே யெந்தை
யொலிவெள் ளருவி வேங்கட நாட
னுறுவருஞ் சிறுவரு மூழ்மாறுய்க்கு
மறத்துறை யம்பியின் மான மறப்பின்
றிருங்கோ ளீராப் பூட்கைக்
கரும்ப னூரன் காதன் மகனே’’
(புறம்.381)
இது மேலும் இக்காலத்தும்
இங்ஙனந் தருவலென்றானெனக்
கூறினமையின் அவன் பரிசினிலை கூறிற்று.
‘‘குன்றும் மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற வென்னயந் தருளி யீதுகொண்டு
ஈங்ஙனஞ் செல்க தானென வென்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த விப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன் பேணித்
தினையனைத் தாயினு மினிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே’’
(புறம்.208)
என்னும் புறப்பாட்டும் அப்பரிசினிலையைக் கூறியது காண்க.
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி
நடைவயின் தோன்றும்
இருவகை விடையும் - அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன்
கொடுத்த
பெருவளனை உயர்த்துக்கூறி உலகவழக்கியலான் தோன்றும்
இரண்டு வகைப்பட்ட விடையும்;
இருவகையாவன, தலைவன்தானே
விடுத்தலும் பரிசிலன்தானே
போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம்.
உ-ம்:
‘‘தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பி
னற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றெ
னரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
யெஞ்சா மரபின் வஞ்சி பாட
வெமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்டு
இலம்பா டு