Primary tabs


மன்பு.”
மன்றல் எட்டாவன: பிரமம், பிராசாபத்தியம்,
ஆரிடம், தெய்வம்,
காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.
அவற்றுட் பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டி
யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப்
பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப்
பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை
அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.
“கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி
அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - இயலின்
நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல்
பிரமமண மென்னும் பெயர்த்து.”
பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய
கோத்திரத்தார் கொடுத்த
பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது.
“அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்கு
உரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி
திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி
அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல்
பிரித லில்லாப் பிராசா பத்தியம்.”
ஆரிடமாவது:தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப்
பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப்
பொன் அணிந்து
நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது.
“தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி
மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - இனக்கொத்த
ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே
ஆரிடத்தார் கண்டமண மாம்.”
தெய்வமாவது: பெருவேள்வி
வேட்பிக்கின்றார் பலருள் ஒருவற்கு
அவ்வேள்வித்தீ முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது.
“நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த
வேள்வி விளங்