Primary tabs


யுரைத்தல்.
“பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமோடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய வுலகத்து
ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே”
(குறுந்.57)
முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப் போந்தனம், இவ்வுலகிலே
இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாயுற்ற துன்பத்துநின்று நாமே
நீங்குதற்கெய்திய
பிரிவரிதாகிய காமத்துடனே
இருவர்க்கும்
உயிர்போவதாக, இஃதெனக்கு
விருப்பமென்றான்; என்பதனான்
தந்நிலையுரைத்தலும் பிரிவச்சமுங் கூறிற்று.
“குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறுந் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பஃறுத்தி மாஅ யோயே
நீயே, அஞ்ச லென்றஎன் சொல்லஞ் சலையே
யானே, குறுங்கால் அன்னங் குவவுமணற் சேக்குங்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலெனால் நின்னுடை நட்பே.”
(குறுந்.300)
இது நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று.
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”
(குறுந்.40)
இது பிரிவரெனக் கருதிய தலைவி
குறிப்புணர்ந்து தலைவன்
கூறியது.
“மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்து
இரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே.”
(குறுந்.137)
“அறத்தா, றன்றெனமொழிந்த தொன்றுபடுகிளவி
யன்ன வாக வென்னுநள் போல.”
(அகம்.5)
இவை தெளிவகப்படுத்தல்.
“அம்மெல் ஓதி விம்முற் றழுங்கல்
எம்மலை வாழ்ந ரிரும்புனம் படுக்கிய
அரந்தின் நவியத் தறுத்த சாந்தநும்
பரந்தேந் தல்குல் திருந்துதழை யுதவும்
பண்பிற் றென்ப வண்மை அதனால்
பல்கால் வந்துநம் பருவரல் தீர
அல்கலும் பொருந்துவ மாகலின்
ஓல்கா வாழ்க்கைத் தாகுமென்