தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5268


 

வெ னெஞ்சுணக்
கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென
யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து
தான்செய் குறிநிலை யினிய கூறி
ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்
டுறுகழை நிவப்பிற் சிறுகுடிப்பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே.”           (நற்.204)

“இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து
நள்ளென் கங்கு னம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
யமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.”           (குறுந்.312)

என வரும்.

அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும்-
மதியுடம்பட்ட   தோழி நீர் கூறிய குறையை  யான்  மறந்தே  னெனக்
கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையான்  தலைவிமருங்கிற்
பிறந்த   கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த  பெருமையையும்
கூறுதலும்:

“ஒள்ளிழை மகளிரோ டோரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்
யாரை யோநிற் றொழுதனம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை யணங்கோ
விருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ
சொல்லினி மடந்தை யென்றனென் அதனெதிர்
முள்ளையிற்று முறுவலுந் திறந்தன
பல்லிதழ் உண்கணும் பரந்தவாற் பனியே”       (நற்.155)

“தண்டழை செரீஇயும் தண்ணென வுயிர்த்தும்
கண்கலுழ் முத்தம் கதிர்முலை யுறைத்தும்
ஆற்றின ளென்பது கேட்டனம் ஆற்றா
வென்னினு மவளினு மிகந்த
வின்னா மாக்கட்டிந் நன்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:23:07(இந்திய நேரம்)