தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5271


 

சாமை,     காவலர்  கடுகுதல்,  நிலவுவெளிப்படுதல்,  நாய்துஞ்சாமை
போல்வனவற்றான் தலைவன் குறியின்கண்   தலைவி   வரப்பெறாமல்
நீட்டித்தலாம்.

உ-ம்:

“இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர்
விழவின் றாயினுந் துஞ்சா தாகும்
மல்ல லாவண மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
பிணிகோள் அருஞ்சிறை யன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்
பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
திங்கள் கல்சேர்பு கனையிருண் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத்து அழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குர லியம்பும்
எல்லா மடிந்த காலை யொருநாள்
நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே
அதனால், அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந்து
ஆதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றால் தோழிநங் களவே”         (அகம்.122)

“கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லையல்லை நெடுவெண் ணிலவே”          (குறுந்.47)

“வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்டிங்காள்
கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாஅலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்.”
                                (யா.வி.சூ.87.மேற்.)

இதுவும் அது.

தானகம்   புகா   அன்   பெயர்த  லின்மையிற் காட்சி ஆசையிற்
களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய   கையறு  பொழுதினும் -
அங்ஙனங்  காணாவகையிற்  பொழுது நனியிகந்து தலைவி குறிதப்பியக்
காலுந்  தலைவன்  குறியிடம்  புகுந்தல்லது   பெயரானென்பது  தான்
அறியுமாதலின், ஆண்டுப் புகுந்தவ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:23:41(இந்திய நேரம்)