தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5274


 

ந்தாய்த் தங்கென்னும்.

உ-ம்:

“நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்
நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்
பறிகொள் கொள்ளையர் மறுக உக்க
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
எல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர்
தேர்பூட் டயர வேஎய் வார்கோல்
செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்
செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச்
சொல்லிய அளவை தான்பெரிது கலுழ்ந்து
தீங்கா யினளிவ ளாயின் தாங்காது
நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப்
பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனான்
சேணின் வருநர் போலப் பேணாய்
இருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின்
வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்
துறையும் மான்றின்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறா யினவே
எல்லின்று தோன்றல் செல்லா தீமென
எமர்குறை கூறத் தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும்
இல்லுறை நல்விருந் தயர்தல்
ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே.”      (அகம்.300)

இதனுள்,  ‘தான்  பெரிது  கலுழ்ந்து  தீங்காயின’  ளெனவே, அக்
குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி
கூறினாள்.

வாளான்  எதிரும் பிரிவினானும்  - வாளாண்மை  செய்தற்கு ஒத்த
பிரிவு தோன்றியவழியும்:

ஆண்டுத் தலைவி  மேற்றுக்  கிளவி.  மூவகைப்  பிரிவினும்  பகை
வயிற்பிரிவை   விதந்தோதி   ஓதலும்  தூதும்  வரைவிடை  வைத்துப்
பிரிவிற்குச் சிறந்தில  என்றாராம்.  அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள்
அவை நிகழப்  பெறா;  இதுவாயின்  வரைவிடை  வைத்துப்  பிரியவும்
பெறும் அரசர்க்கு இன்றியமையாத பிரிவாகலின்  என்பது  கருத்து. இப்
பிரிவு  அரசர்க்கு  உரித்தென்பது  ‘தானே  சேறலும்’  (தொல்.பொ.27)
என்னும் சூத்திரத்தாற் பெறுதும். வாளாண்மைக்கு  ஏற்ற  பிரிவெனவே,
முடியுடை   வேந்தரேவலிற்  பிரியும்  அரசர்கண்ணது  இப்பிரிவென்க.
சிறுபான்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:24:17(இந்திய நேரம்)