தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5285


 

நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்று
எவனோ தோழி நாமிழப் பதுவே.”           (குறுந்.334)

இதுவும் அது.

இவை களவினுட் புலவிப்போலியாம்.

அருமை செய்து அயர்ப்பினும் - முற்கூறிய இட்டுப்  பிரிவேயன்றித்
தலைவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு தம்மை மறப்பினும்:

அது  தண்டாதிரத்தலை  (தொல்.பொ.102)  முனிந்த  மற்றையவழித்
தலைவன்    தானும்    அரியனாய்மறந்தான்   போன்று   காட்டினும்
அவ்விரண்டுங் கூறுதலாம்.

உ-ம்:

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க வென்ப மாதோ
வழுவப்பிண்ட நாப்ப ணேமுற்
றிருவெதி ரீன்ற வேற்றிலைக் கொழுமுளை
சூன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரும்
மலைகெழு நாடன் கேண்மை பலவின்
மாச்சினை துறந்த கோண்முதிர் பெரும்பழம்
விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச்
சேணுஞ் சென்றுக் கன்றே யறியா
தேக லடுக்கத் திருண்முகை யிருந்த
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிரும்
இன்னு மோவா ரென்றிறத் தலரே.”             (நற்.116)

தீங்கு செய்தாரையும்  பொறுக்கிற்பார்  நம்மைத்  துறத்தலின்  நாம்
அரியேமாகியது    பற்றித்    தாமும்   அரியராயினார்   போலுமென
அவ்விரண்டுங் கூறினாள்.

“நெய்தற் படப்பை னிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலிற் கண்டநாட் போலானாற்”

“செய்த குறியும்பொய் யாயினவாற் சேயிழாய்
ஐயகொ லான்றார் தொடர்பு.”            (திணை.ஐம்.41)

இதுவும் அது.

வந்தவழி   எள்ளினும்  -  பெரிதாகிய  இடையீட்டினுள் அரிதாகத்
தலைவன்  வந்தஞான்றும்  பெறாதஞான்றைத்  துன்பமிகுதியாற் பெற்ற
தனையுங் கனவு போன்றுகொண்டு இகழ்ந்திருப்பினும்:

உ-ம்:

“மானடி யன்ன கவட்டிலை யடும்பின்
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி
ஓண்டொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
யுள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே”      (குறுந்.243)

“வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.”                     (குறள்.1179)

“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு.”             (குறள்.1152)

‘வரிற்றுஞ்சா’  வெனவும்  ‘புன்கணுடைத்து’ எனவும் வரவும் பிரிவும்
அஞ்சி இரண்டும் நிகழக்கூறினாள். இது முன்னிலைப் புறமொழி.

“கண்டி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:26:27(இந்திய நேரம்)