தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5295


 

க்குழாந்   தம்மை  மடலூர   விடாவென   விளையாட்டுவகையாற்
பொய்யென்று இகழ்ந்தது.

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் - தலைவியை ஆற்றுவித்துக்
கையற்ற தோழி தலைவிக்கண்ணீரைத் துடைப்பினும்:

உ-ம்:

“யாமெங் காமம்தாங்கவும் தாந்தங்
கெழுதகை மையின் அழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
யேறா திட்ட வேமப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்ட வெங்கண்ணே.”        (குறுந்.241)

இது  தன் ஆற்றாமைக்கு  ஆற்றாத தோழியை ஆற்றுவிக் கின்றாள்
அவ்விரண்டுங் கூறியது.

வெறியாட்டிடத்து   வெருவின்கண்ணும்   -   தலைவி   வேறுபாடு
எற்றினானாயிற்றென்று  வேலனை   வினாய்  வெறியாட்டு  எடுத்துழித்,
தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்:

அது பண்டேயுந் தன்பரத்தைமையான் நெகிழ்ந்தொழுகுவான், இன்று
நம்  ஆற்றாமைக்கு   மருந்து  பிறிது  முண்டென்  றறியின்,  வரைவு
நீடுமென்று அஞ்சுதல்.

உ-ம்:

“பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்
துனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த
இனியஉள்ளம் இன்னா வாக
முனிதக நிறுத்த நல்க லெவ்வம்
சூருறை வெற்பன் மார்புறத் தணிதல்
அறிந்தன ளல்ல ளன்னை வார்கோல்
செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ
முருக னாரணங் கென்றலின் அதுசெத்து
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை யன்ன பலராய் மாண்கவின்
பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பறைஇக்
கூடுகொள் இன்னியங் கறங்கக் களனிழைத்து
ஆடணி யயர்ந்த அகன்பெரும் பந்தர்
வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீர்
ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச்
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்
வெறியயர் வெங்களம் பொற்ப வல்லோன்
பொறியமை பாவையிற் றூங்கல் வேண்டின்
என்னாங் கொல்லோ தோழி மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையிற் சிறவா தாயின் இம்மறை
அலரா காமையோ அரிதே அஃதா அன்று
அன்றிவ ருறுவிய அல்லல்கண்டருளி
வெறிகமழ்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:28:25(இந்திய நேரம்)