Primary tabs


கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட் டிடமுமாம்.
உ-ம்:
“பொய்படு பறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயி லாலுநம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வே ளல்லனிவள்
பூண்டாங் கிளைமுலை யணங்கி யோனே.” (ஐங்குறு.250)
இது கழங்குபார்த்துழிக் கூறியது.
“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை யனையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.” (ஐங்குறு.243)
இது தாயறியாமை கூறி வெறி விலக்கியது.
“அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயின்
என்பயஞ் செய்யுமோ வேலற்கு வெறியே.” (ஐங்குறு.244)
இது தலைவிக்குக் கூறியது.
“நெய்த னறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழு மார்பன்
அருந்திறற் கடவு ளல்லன்
பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே.” (ஐங்குறு.182)
இது வேலற்குக் கூறியது.
“கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி யொன்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி யின்னியத் தாடு நாடன்
மார்புதர வந்த படர்மலி யருநோய்
நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினு மாக
மடவை மன்ற வாழிய முருகே.”
(நற்.34)
இது முருகற்குக் கூறியது.
“அன்னை தந்த தாகுவ தறிவென்
பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி
முருகென மொழியு மாயின்
அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே.” (ஐங்குறு.247)
இது தமர்கேட்பக் கூறியது.
பிறன்வரைவு ஆயினும்-நொதுமலர் வரையக் கருதிய வழித் தலைவி
சுற்றத்தார்
அவ்வரைவினை ஆராயினும்: தோழி
தலைவற்குந்
தலைவிக்குங் கூறும்.
உ-ம்:
“கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென
நெடுந்தேர் பண்ணி வரலா னாதே