Primary tabs


லஞ் சோபா லிகை செயலை
யள்ளி யளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை
யுதணாற் கடிந்தா னுளன்.”
(திணை.நூற்.2)
இது களிற்றிடை யுதவி கூறிற்று.
“வில்லார் விழவினும் வேலாழி சூழுலகின்
நல்லார் விழவகத்தும் நாங்காணே - நல்லா
யுவர்க்கத் தெறிதிரைச் சேர்ப்பனோ டொப்பார்
சுவர்க்கத் துளராயிற் சூழ்.”
(திணை.நூற்.62)
இது, செவிலி தலைவியைக் கோலஞ்செய்து
இவள் நலத்திற்கு
ஒப்பான் ஒருவனைப் பெறவேண்டுமென்றாட்குத் தோழி கூறியது.
“பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி யகமனை யீனுந்
தண்ணந் துறைவ னல்கி
னொண்ணுத லரிவை பாலா ரும்மே.”
(ஐங்குறு.168)
இது, நொதுமலர்
வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி இதற்குக்
காரணமென்னென்ற செவிலிக்குத் தோழி கூறியது.
“எந்தையும் யாயு முணரக் காட்டி
யொளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையி னொன்றா வின்றே
முடங்க லிறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூட்டினு மயங்கிய மைய லூரே.”
(குறுந்.374)
இஃது அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறியது.
வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும் - தலைவி தமர்
வரைவுடன் படத்தானும் வரைவுடன் பட்ட
தலைவன் வரைவிடை
வைத்துப் பிரிந்து நீட்டித்துழி இனி நீட்டிக்கற்பாலை யல்லையெனக்
கடுஞ்சொற் கூறி வரைவுகடாவல் வேண்டிய இடத்தும்.
உ-ம்:
“மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்;
ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை
அறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்