Primary tabs


கு கிளவியும் பாங்குற வந்த என்க. நாட்டத்தின் கண்ணும் எஞ்சாமற்
கிளந்த என்க. என்றது ஆராய்ச்சியுடனே இவ்வெட்டுங் கூறுமென்றான்.
பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக்
கூட்டத்தோடு எஞ்சாமற்
கிளந்த என்க. ஏனைப்பொருள்கள் ஏழனுருபும்
வினையெச்சமுமாய்
நின்ற வற்றைப் பாங்குறவந்த
என்பதனொடு முடித்து
அப்பெயரெச்சத்தினை நாலெட் டென்னும்
பெயரொடு முடித்து
அதனைத் தோழிமேனவென முடிக்க.
இனி ‘வகை’ யாற்கொள்வன வருமாறு:
“அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எந்தோள் துறந்த காலை யெவன்கொல்
பன்னாள் வருமவ னளித்த பொழுதே.”
(ஐங்குறு.109)
இஃது அறத்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து நீட்டித்துழி ஐயுற்ற
செவிலி
அவன் நும்மைத் துறந்தான் போலும் நுங்கட்கு
அவன்
கூறியதிறம் யாதென்றாட்குத் தோழி கூறியது.
“அன்னை வாழிவேண் டன்னை கழனிய
முண்டக மலருந் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தன னாயின்
எவன்கொன் மற்றவ னயந்த தோளே.”
(ஐங்குறு.108)
இஃது அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை
வரையுங் கொலொன்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி அவட்குக்
கூறியது.
“அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவன்
இவட்கமைந் தனனாற் றானே
தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே. (ஐங்குறு.103)
இது, வதுவைநிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது.
“கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற்
கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்னர்
அமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார்
நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”
இது, சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்தாரென்றது.
“நொதும லாளர் கொள்ளா ரிவையே
யெ