Primary tabs


லின்; தாமே தூதுவர் ஆகலும் உரித்தே - ஒருவருக்கு ஒருவர்தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடுதலும் ஆண்டுரித்து எ-று.
அது மெய்ப்பாட்டினுட் ‘புகமுகம் புரிதன்’ (261) முதலிய
பன்னிரண்டானும் அறிக. இதன் பயன் இக் கூட்டத்தின் பின்னர் வரைதலும் உண்டென்பதாம். (28)
களங்கூறுதற்குரியாள் தலைவியெனல்
120. அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின்
களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்
தான்செலற் குரிய வழியாக லான.
இது முன்னர்க் களனும் பொழுதும் என்றவற்றுட் களங்கூறுதற்கும்
உரியாள் தலைவியென்கின்றது.
(இ-ள்.)
அவன் வரம்பு இறத்தல் - தலைவன் கூறிய கூற்றின்
எல்லையைக் கடத்தல்; தனக்கு அறமின்மையின் - தலைவிக்கு உரித்தெனக் கூறிய தருமநூலின்மையின்; களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் - தலைமகனை இன்னவிடத்து வருகவென்று ஓரிடத்தைத் தான் கருதிக் கூறுங்கூற்று அவன் குறிப்பு வழி ஓங்குந் தலைவியதாம்; தான் செலற்கு உரியவழி ஆகலான - தான் சென்று கூடுதற்குரிய இடந் தானே உணர்வள் ஆதலான் எ-று.
‘சுட்டுக்கிளவி’ என்றதன் கருத்துத் தலைவன் இருவகைக் குறியும்
வேண்டியவழி அவனை மறாது தான் அறிந்த விடத்தினைக் கூற்றானன்றிக் குறிப்பானாதல் சிறைப்புறத்தானாதல் தோழி யானாதல் உணர்த்துமென்பதாம், தலவன் களஞ்சுட்டுமாயின் யாண்டானும் எப்பொழுதானும் அக்களவொழுக்கம் நிகழ்ந்து பிறர்க்கும் புலனாய்க் குடிப்பிறப்பு முதலியவற்றிற்குத் தகாதாம். “விரியிணர்
வேங்கை” என்னும் (38) அகப்பாட்டுத் தலைவி களஞ்சுட்டியது: “மறந்திசின் யானே” என்றலின் இது குறிப்பான் உணர்த்திற்று, பிறவும் வந்துழிக் காண்க. (29)
தோழிக்குங் களஞ்சுட்டுக்கிளவி யுரித்தெனல்
121. தோழியின் முடியு மிடனுமா ருண்டே.
இது, தோழிக்குங் களஞ்சுட்டுக் கிளவி உரித்தென்று எய்தாதது
எய்துவித்தது.
(இ-ள்.) களஞ்சுட்டுக் கிளவி தலைவி குறிப்பான் தோழி கூறுதலன்றித் தானேயுங் கூறப்பெறும் ஒரோவழி என்றவாறு. தோழி குறித்த இடமுந் தலைவி தான் சேறற்குரிய இடமாமென்பது