தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5364


 

இதன் பயன் தலைவி துன்பந் தனதாகத் துன்புறுதலாயிற்று. (42)
தலைவனு மல்லகுறியால் வருந்துவனெனல்

134. ஆங்காங் கொழுகும் ஒழுக்கமு முண்டே
யோங்கிய சிறப்பின் ஒருசிறை யான.

இது தலைவனும் அல்லகுறியான் வருந்துவனென்கின்றது.

(இ-ள்.)  ஓங்கிய சிறப்பின் - தனது மிக்க தலைமைப் பாட்டினானே
பொழுதறிந்து    வாராமையின்;    ஒருசிறை   ஆன  ஆங்கு - தான்
குறிசெய்வ தோரிடத்தே  தன்னானன்றி    இயற்கையான்    உண்டான
அவ்வல்ல   குறியிடத்தே;   ஆங்கு   ஒழுகும்  ஒழுக்கமும் உண்டு -
தலைவியுந்  தோழியுந்  துன்புறுமாறு  போலத்  தலைவனுந்  துன்புற்று
ஒழுகும் ஒழுக்கமும் உண்டு எ-று.

முன்னர்   நின்ற   ‘ஆங்கு’  முன்னிற்சூத்திரத்து  அல்லகுறியைச்
சுட்டிற்று;  பின்னர் நின்ற ‘ஆங்கு’ உவமவுருபு.

உ-ம்:

“தாவி னன்பொன் றைஇய பாவை
விண்டவ ழிளவெயிற் கொண்டுநின் றன்ன
மிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால்
கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற
முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்
நயவன் றைவருஞ் செவ்வழி நல்யாழ்
இசையோர்த் தன்ன இன்றீங் கிளவி
அணங்குசா லரிவையை நசைஇப் பெருங்களிற்
றினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற்
பெறலருங் குரைய ளென்னாய் வைகலும்
இன்னா வருஞ்சுர நீந்தி நீயே
யென்னை யின்னற் படுத்தனை மின்னுவசி
புரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று
விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப்
படைநிலா விலங்குங் கடன்மருள் தானை
மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய
நீர்மா ணெஃக நிறத்துச்சென் றழுந்தக்
கூர்மத னழியரோ நெஞ்சே யானா
தெளிய ளல்லோட் கருதி
விளியா வெவ்வந் தலைத்தந் தோயே.”        (அகம்.212)

வடமலை மிசையோன் கண்ணில் முடவன்
தென்றிசை யெல்லை விண்புகு பொதியில்
சூருடை நெடுஞ்சுனை நீர்வேட் டாங்கு
வருந்தினை வாழியென் உள்ளம் சாரல்
பொருது புறங்கண்ட பூநுத லொருத்தல்
சிலம்பிழி பொழு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:41:54(இந்திய நேரம்)