Primary tabs


க்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகருந் தத்தம் வகையாற்
செய்யத்தகுவன செய்யாது
சடங்கொப்புமை கருதித் தாமும்
அந்தணரொடு தலைமை செய்தொழுகுதலுங்
களவொழுக்கத்தின்
இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும்
இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ப்
பொய்யும் வழுவுந் தோன்றி
வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு
இருடிகள் மேலோர்
மூவர்க்கும் வேறு வேறு சடங்கினைக்
கட்டிக் கீழோர்க்குங்
களவின்றியும் கற்பு நிகழுமெனவுஞ் சடங்கு வேறு வேறு
கட்டினார்.
எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய கரணம்
வேதநூற்கே
உளதென்பது பெற்றாம். ஆயின் கந்தருவ
வழக்கத்திற்குச் சிறந்த களவு
விலக்குண்டதன்றோ எனின், ஒருவனையும் ஒருத்தியையும்
எதிர்நிறீஇ
‘இவளைக் கொள்ள இயைதியோ நீ’ எனவும்,
‘இவற்குக் கொடுப்ப
இயைதியோ நீ’ எனவும் இருமுது குரவர் கேட்டவழி அவர்
கரந்த
உள்ளத்தான் இயைந்தவழிக்
கொடுப்பவாகலின் அது தானே
ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம், களவொழுக்கம் நிகழாதாயினும்
என்பது, கரணம் யாத்தோர் கருத்தென்பது
பெற்றாம். இதனானே
இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறு
புணர்ச்சியையும் உள்ளப்
புணர்ச்சியென்றுகூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்ததென்றுங்
கூறவும்படும்.
இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின்
முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்தபின்னர்க்
கற்பு
நிகழுமாறுங் கூறித்தாம் நூல்செய்கின்ற
காலத்துப் பொய்யும்
வழுவும்பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார்,
அக்கள