தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5398


 

ரேற்றுக்   கொள்ளும்  மங்கலமரபினர்  மாலையேந்திய  பெண்டிரும்
புதல்வருங் கேளிரும் மங்கலமரபினர்   மாலையேந்திய   பெண்டிரும்
புதல்வருங் கேளிரும்  ஆகலான்  அக்கேளிர்  செய்யும்  எதிர்கோட
லொழுக்கத்துக் கண்ணும்: தலைமகன் உள்ளமகிழ்ந் துரைக்கும்.

உம்மை விரிக்க. பெண்டிரும் மக்களுமாகிய கேளிரென்றுமாம்.

உ-ம்:

“திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பின்
நாணுடை அரிவை மாண்நகர் நெடுந்தேர்
எய்த வந்தன்றாற் பாக நல்வரவு
இளையர் இசைத்தலின் கிளையோ ரெல்லாஞ்
சேயுயர் நெடுங்கடைத் துவன்றினர் எதிர்மார்
தாயரும் புதல்வருந் தம்முன் பறியாக்
கழிபே ருவகை வழிவழி சிறப்ப
அறம்புரி யொழுக்கங் காண்கம்
வருந்தின காண்கநின் திருந்துநடை மாவே.”

என வரும்.

ஏனை வாயில் எதிரொடு தொகைஇ  -  சிறந்த மொழியை ஒழிந்து
நின்ற  வாயில்கட்கு  எதிரே  கூறுங்  கூற்றோடே முற் கூறியவற்றைத்
தொகுத்து:

உ-ம்:

“நகுகம் வாராய் பாண பகுவாய்
அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யாம்தன்
முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசில் திருநுதல்
நாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து
வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ
யாரை யோவென் றிகழ்ந்துநின் றதுவே.”      (நற்.250)

இஃது ஏனைவாயிலாகிய பாணற்கு உரைத்தது.

பண்ணமை  பகுதி முப்பதினொரு மூன்றும் - ஓதப்பட்ட இவையே
இடமாக  நல்லறிவுடையோர்  ஆண்டாண்டு வேறு வேறாகச் செய்யுள்
செய்து   கோடற்கு   அமைந்துநின்ற   கூறுபாட்டை  உடையவாகிய
முப்பத்துமூன்று கிளவியும்:

எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன்  மேன  - களவுபோல இழிதொழி
லின்றி ஆராய்தற்கரிய சிறப்பொடு கூடிய தலைவன் கண்ண எ-று.

சிறப்பாவன, வந்த குற்றம் வழிகெட ஒ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:48:30(இந்திய நேரம்)