தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5429


 

இழையணி யானைப் பழையன் மாறன்
மாடமலி மறுகிற் கூடல் ஆங்கண்
வெள்ளத் தானையொடு வேறுபுலத்திறுத்த
கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வௌவி
ஏதின் மன்னர் ஊர்கொளக்
கோதை மார்ப னுவகையிற் பெரிதே.”         (அகம்.346)

“கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மைய னெஞ்சிற் கெவ்வந் தீர
நினக்குமருந் தாகிய யானினி
யிவட்குமருந் தன்மை நோமெ னெஞ்சே”      (ஐங்குறு.59)

என வரும்.

வணங்கியன்  மொழியான்   வணங்கற்கண்ணும்    -      தாழும்
இயல்பினையுடைய சொற்களான் தோழி தாழ்ந்து  நிற்கும்   நிலைமைக்
கண்ணும்:

உ-ம்:

“உண்துறைப் பொய்கை வராஅல் இனமிரியுந்
தண்துறையூர தகுவகொல் - ஒண்டொடியைப்
பாராய் மனைத்துறந்தச் சேரிச் செலவதனை
யூராண்மை யாக்கிக் கொளல்”              (ஐந்.எழு.54)

என வரும்.

“பகலறி றோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன
இவணலம் புலம்பப் பிரிய
அனைநல முடையளோ மகிழநநின் பெண்டே.”  (ஐங்குறு.57)

இதுவும் அதன் பாற்படும்.

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தையும் யரிடத்தே
உண்டாம் விளையாட்டினைத்  தலைவன்  பொருந்திய   மனமகிழ்ச்சிக்
கண்ணும்:

விளையாட்டாவது   யாறுங்   குளனுங்   காவும் ஆடிப் பதியிகந்து
நுகர்தலாம்.

“பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்துக்
கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்
தரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறடு கதச்சேப் போல மதமிக்கு
நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர
வருபுனல் வையை வார்மணல் அகன்றுறைத்
திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை யயர்ந்தனை யென்ப அலரே
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கான
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:54:35(இந்திய நேரம்)