தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5495


 

லின் வழுவாயமைந்தது.

“மற்று
இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோயெனச் செப்பா தீமே.”              (அகம்.52)

என்றாற்போல்வனவே    இலக்கணமென்பது  மேலிற் சூத்திரத்தாற்
கூறுப.                                                 (14)

அறத்தொடு நிற்றல் வழுவென்றற்குக் காரணங் கூறல்

209. செறிவும் நிறையஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான.

இது,     மறைப்புலப்படாமல்     ஒழுகுதல் இலக்கணமென்றற்கும்
மறைபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் காரணம் கூறுகின்றது.

(இ-ள்.)   செறிவும் - அடக்கமும் ; நிறைவும் - மறைபுலப் படாமல்
நிறுத்தும் உள்ளமும் ;  செம்மையும்-மனக்கோட்ட மின்மையும்: செப்பும்
- களவின்கட் செய்யத் தகுவன கூறலும்; அறிவும் - நன்மைபயப்பனவுந்
தீமை  பயப்பனவும்  அறிவித்தலும்;  அருமையும் -  உள்ளக்கருத்தறித
லருமையும்  ;   பெண்பாலான   -   இவையெல்லாம்   பெண்பாற்குக் காரணங்கள் எ-று.

இவையுடையளெனவே      மறைபுலப்படுத்தற்கு       உரியளல்ல
ளென்பதூஉம் அதனைப்  புலப்படுத்தலின் முற்கூறியன வழுவமைத்தன
வுமாயிற்று. இவை வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் சிங்கநோக்கு.   (15)

வரைதல் வேட்கைக்குரிய கூற்றுக்கள் இவையெனல்

210. பொழுதும் ஆறுங் காப்புமென் றிவற்றின்
வழுவின் ஆகிய குற்றங் காட்டலும்
தன்னை யழிதலும் அவனூ றஞ்சலும்
இரவினும் பகலினும் நீவரல் என்றலுங்
கிழவோன் தன்னை வாரல் என்றலும்
நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப.

இதுவும் தோழிக்குந் தலைவிக்கும் உரியனவாகிய வழுவமைக்கின்றது.

(இ-ள்.) பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவின் ஆகிய
குற்றங் காட்டலும் -  இராப்பொழுதும்  அக்காலத்துவழியுங் கண்ணுறும்
இடத்துள்ள காவலுமென்று  கூறப்பட்டவை  மூன்றனது பழையமுறையிற்
பிறழுதலாற் தலைவன்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும்:

இவை  தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனால் நிகழும்
இன்பத்தைத்   துன்பமாகக்   கருதுதலும்   உடையனவாயிற்   றேனும்
அன்புபற்றிக் கூறலின் அமைந்தது. அப்பொழுதிற்றலை
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:07:32(இந்திய நேரம்)