தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5521


 

ளாயதென அவன் கருதக் கூறினாள்.

“அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச்
சாந்த நாறும் நறியோள்
கூந்தல் நாறுநின் மார்பே தெய்யோ.”       (ஐங்குறு.230)

இதுவும் அது.

“நீயே, பொய்வன் மையிற் செய்பொருண் மறைத்து
வந்துவழிப் படுகுவை யதனால்
எம்மை யெமக்கே வில்வலனே
தகாது சொல்லப் பலவும் பற்றி
யொருநீ வருதல் நாடொறும் உள்ளுடைந்
தீர்மா மழைக்கண் கலுழ்க மதனால்
நல்லோர் கண்ணு மஃதல்ல
தில்லை போலுமிவ் வுலகத் தானே.”

இது பொய்தலைப் பெய்தது.

“திருந்திழாய் கேளாய்” (கலி.65)  என்னுங்  குறிஞ்சிக்  கலியுள்
வரைந்து கோடற்குப் பொய்யுரை படைத்தது.

“அன்னையு மறிந்தனள் அலரு மாயின்று
நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரும்
இன்னா வாடையும் மலையும்
நும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ.”      (ஐங்குறு.236)

இது, நல்வகையுடைய நயத்திற் கூறியது.

“வீகமழ் சிலம்பின் வேட்டம் போந்து
நீயே கூறினு மமையுநின் குறையே.”

இதுவும் அது.

அஃதன்றியும்   நீயே   சென்று  கூறென்றலுங் அறியாள் போறலுங்
குறியாள் கூறலுங்     குறிப்புவேறு கூறலும் பிறவும் நயத்திற்கூறும் பகு
தியாற் படைத்தது    பலவகையாற்     படைத்த     துறைவகையாம்.
இன்னும்    வேறுபட     வருவனவெல்லாம்  இதனானமைக்க.  இவை
நாடகவழக்காகவும்  உலகியல் வழக்காகவும்  புனைந்துரைத் தமையானுந்
தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூறலானும் வழுவமைந்தது. (43)

உறழுங் கிளவி தலைவி முதலியோர்க்கும்

ஐயக்கிளவி தலைவற்கு முரியஎனல்

238. உயர்மொழிக் குரிய உறழுங் கிளவி
ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே.

இது, தோழிக்குந் தலைவிக்குமுரியதொரு வழுவமைக் கின்றது.

(இ-ள்.)  உயர்மொழிக்கு  உறழுங்    கிளவியும்   உரிய - இன்பம்
உயர் தற்குக்  காரணமான  கூற்றுநிகழுமிடத்திற்கு     எதிர்மொழியாக
மாறுபடக் கூறுங்கிளவி   நிகழ்தலுமுரிய;      ஐயக்கிளவி ஆடூஉவிற்கு
உரித்தே - கூறுவே மோ கூறேமோ   என்று ஐயமுற்றுக் கூறுஞ் சொல்
தலைவற்குரித்து எ-று.

உறழுங்கிளவியைப் பொதுப்படக் கூறினார்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:12:38(இந்திய நேரம்)