தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5523


 

தது.

“சொல்லின் மறாதீவாண் மன்னோ விவள்”         (கலி.61)

எனவும்,

“கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்
கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது”            அகம்.198)

எனவும்   ஐயக்கிளவி   தலைவிக்குமுரித்தென்றாற்   ‘சிறந்துழியையம்’
(தொல்.பொ.94) என்பதற்கு மாறாம்.

“அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
மகனே தோழி யென்றனள்”                  (அகம்.48)

என்பதனை ஐயத்துக்கண் தெய்வமென்று  துணிந்தாளெனின்  அதனைப்
பேராசிரியர் தாமே மறுத்தவாறு காண்க.                      (44)

தோழி அறிவுடையளாகக் கூறலும் அமையுமெனல்

239. உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின்
உரிய தாகுந் தோழிகண் உரனே.

இது, தோழி அறிவுடையளாகக் கூறலும் அமைகவென்கின்றது.

(இ-ள்.) உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின் - தலைவிக்கு வந்த
வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக்  கடனாதலின்,  தோழிகண்  உரன்
உரியதாகும் - தோழிமாட்டு அறிவுளதாகக் கூறல் உரித்தாகும் எ-று.

உ-ம்:

“பான்மருண் மருப்பின்” (கலி.21) என்னும் பாலைக் கலியுட்,

“பொருள் தான்
பழவினை மருங்கின் பெயர்வு பெயர்புறையும்
அன்ன பொருள்வயின் பிரிவோய்”              (கலி.21)

எனத் தோழி அறிவுடையாளாகக் கூறியவாறு காண்க.

“பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ.”        (அகம்.46)

என்பது   உறுகண்  காத்தற்பொருட்டாகத்  தலைவி  வருந்தினும்   நீ
செல்லென்றாள், தலைவன் செல்லாமை அறிதலின்.

ஒன்றென  முடித்தலான்   தலைவி     உரனுடையளெனக்    கூறலுங் கொள்க. (45)

தோழிக்கு உயர்மொழிக் கிளவியு முரித்தெனல்

240. உயர்மொழிக் கிளவியு முரியவால் அவட்கே.
இதுவுந் தோழிக்குரியதொரு வேறுபாடு கூறுகின்றது.

(இ-ள்.) அவட்கு - தோழிக்கு;  உயர்மொழிக்  கிளவியும்  உரிய -
தலைவியையுந்    தலைவனையும்    உயர்த்துக்        கூறுங்கூற்றும் உரியவாம் ஒரோவோரிடத்து எ-று.

“மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாண ரூரநின் மாணிழை அரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.”     (ஐங்குறு.42)
 

இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி  வருகின்ற
மார்பினைத் தான்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:13:02(இந்திய நேரம்)