தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   175

ஓம்புமின், உரித்தன்று;
நிரை செலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர்
வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,
கழுதில் சேணோன் ஏவொடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,
நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்,
நெறிக் கெடக் கிடந்த, இரும் பிணர் எருத்தின்,
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முளி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது, இறாயினிர் மிசைந்து;
துகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர்,
குவளை அம் பைஞ் சுனை, அசை விடப் பருகி;
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினிர்,
புள் கை போகிய புன் தலை மகாரொடு
அற்கு, இடை கழிதல் ஓம்பி, ஆற்ற, நும்
இல் புக்கன்ன, கல் அளை வதிமின்
அல் சேர்ந்து அல்கி, அசைதல் ஓம்பி,
வான்கண் விரிந்த விடியல், ஏற்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:57:03(இந்திய நேரம்)