Primary tabs


அகன் கண் பாறைத் துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பி, நும் இயங்கள் தொடுமின்:
பாடு இன் அருவிப் பயம் கெழு மீமிசைக்
காடு காத்து உறையும் கானவர் உளரே;
நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்
புனல் படு பூசலின், விரைந்து வல் எய்தி,
உண்டற்கு இனிய பழனும், கண்டோர்
மலைதற்கு இனிய பூவும், காட்டி,
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற,
நும்மின், நெஞ்சத்து அவலம் வீட,
இம்மென் கடும்போடு இனியர் ஆகுவிர்:
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு,
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு, புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து,
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்,
பல திறம் பெயர்பவை கேட்குவிர்மாதோ
கலை