Primary tabs


மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக்
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி,
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்பக்
குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர்
முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண்
விழவின் அற்று, அவன் வியன் கண் வெற்பே;
கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்,
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
'இன்னும் வருவதாக, நமக்கு' எனத்
தொல் முறை மரபினிர் ஆகிப் பன் மாண்
செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு