Primary tabs


கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின்
உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்,
அரசு நிலை தளர்க்கும், அருப்பமும் உடைய;
பின்னியன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,
முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல்
இன் இசை நல் யாழ்ப் பத்தரும், விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும், ஓம்பிக்
கை பிணி விடாஅது பையக் கழிமின்,
களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவப் பலவே;
ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென,
நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத்
தொன்று