Primary tabs


கொடு விற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மைக்
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே,
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ,
ஓம்புநர் அல்லது, உடற்றுநர் இல்லை;
ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்,
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி,
திரங்கு மரல் நாரில், பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென,
உண்டனிர், ஆடிக் கொண்டனிர் கழிமின்
செவ் வீ வேங்கைப் பூவின் அன்ன,
வேய் கொள் அரிசி, மிதவை சொரிந்த,
சுவல்