Primary tabs


நெடு நா ஒண் மணி நிழத்திய நடு நாள்,
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்குத்,
துகின் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏனம் சூழப்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள்,
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
'எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து' என்று இசைப்ப
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து,
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டித் திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவிற்,
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன