Primary tabs


பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து,
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தெனக் குறுங் கண்
வாயுறை அழுத்திய, வறிது வீழ் காதின்,
பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை,
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ் விரல் கொளீஇய செங் கேழ் விளக்கத்துப்
பூந் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்,
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு,
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்
தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,
அம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை,
வம்பு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின்,
மெல் இயல் மகளிர்