Primary tabs


இன்னா அரும் படர் தீர, விறல் தந்து,
இன்னே முடிகதில் அம்ம மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக் கை நிலமிசைப் புரள,
களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல்
பாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல,
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்,
மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ் சேற்றுத்