Primary tabs


பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு
வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு,
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்,
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த்
திரை தரு மரபின், உரவோன் உம்பல்,
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின்,
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!
அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டு, ஆங்கு,
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச்
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்!
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த