Primary tabs


தடவு நிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும்
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங் காய் புடை விரிந்தன்ன
வரிப் புற அணிலொடு, கருப்பை ஆடாது,
யாற்று அறல் புரையும் வெரிநுடைக், கொழு மடல்,
வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர்,
ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ்
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல்
உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி,
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறை தாள் விளவின்
நீழல் முன்றில், நில உரல் பெய்து,
குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டித் தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல்
'வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை, ஒண் தொழிற்