Primary tabs


முனிவு இகந்திருந்த முது வாய் இரவல!
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங் கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங் கள் நாற, மெல்குபு பெயராக்
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் - ஒன்னார்
வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே: அதாஅன்று,
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து
அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பில்,
செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கித்
தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசுப்பின்,