தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

சிறுபாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   251

ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்!
நறும் பூங் கோதை தொடுத்த நாள்சினைக்
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து,
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா, அருங் கடி வியல் நகர்,
அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை,
பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉ, மக முறை தடுப்ப,
இருங் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு,
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்!
எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று,
கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:04:15(இந்திய நேரம்)