Primary tabs
-
இலக்கணக் கொத்துஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே,
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே,
நூல்உரை போதகா சிரியர் மூவரும்,
முக்குண வசத்தான் முறைமறந்து அறைவரே!
இம்முறை எல்லாம் எவர்பகுத்து அறியினும்
அவத்தை வசத்தால் அலைகுவர் திடனே
அதிமதி நுட்பமோடு அதிகலை கற்பினும்
விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பாம்
ஆகையால் அளவிடல் அரிதே, அன்றியும்
சொல்லின் கூட்டமும், பொருளின் கூட்டமும்
அவ்விரண் டனையும் அளவிடப் படாவே,
இந்நால் வகையினுள் என்னால் இயன்றது
சிறப்பாய் உள்ளன சிலதே டினன், அவை
மறப்பு எனும் பகைவன் வாரிக் கொண்டனன்,
அவன்கையில் அகப்படாது அடங்கின வற்றுளும்
சிறிதினைச் சிறியேன் சிறிய சிறார்தமக்கு
உரைத்தனன், அன்றிஈது ஒருநூல் அன்றே
இவ்வழக்கு அறிந்தோர் இகழுதல் வழக்கே!
இவ்வழக்கு அறியார் இகழுதல் வழக்கே.
இந்நூல் பார்த்தற்கு உரிய கருவிகள்பத்தாவன
7.வடமொழி இலக்கணம் சிலவகுத்து அறிந்து
தொல்காப் பியத்தினும் தொல்காப் பியத்தினும்
அருகிக் கிடந்ததைப் பெருக உரைத்தனன்
வேறுவிதி நவமாய் விளம்பிலன்என்க;
தொல்காப் பியம்திரு வள்ளுவர் ஆதிநூல்
வடமொழி நியாயம் வந்தன சிலவே
தமிழின் நியாயம் தந்தன பலவால்;
தமிழ்விதி வல்லராய் வடமொழி விதிசில
அறிந்தவர்க் கேஇந் நூல்ஆம் என்க
வடமொழி வழிகல வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை என்னெனின்,
இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம்
சாத்திரம் சூத்திரம் தந்திர வுத்தி
பகுதி விகுதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகாரம் மகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதிஅலங் காரம்


