தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • பெரும்பாணாற்றுப்படை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   29

    வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த,
    வெந் நீர், அரியல் விரல் அலை, நறும் பிழி,
    தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர்!
    பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
    கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
    நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ,
    கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்பப்
    பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
    நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
    நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த
    கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி,
    உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை
    அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
    அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
    முரட் பூ மலிந்த முது நீர்ப் பொய்கைக்
    குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர்
    பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்!
    செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர்,
    பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்,
    மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது,
    வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்
    மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
    பெரு நல் வானத்து வடவயின் விளங்கும்
    சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல்,
    வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட,
    சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப் படு வத்தம்,
    சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
    உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி கலந்து,
    கஞ்சக நறு முறி அளைஇப் பைந் துணர்
    நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:08:31(இந்திய நேரம்)