தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • பெரும்பாணாற்றுப்படை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   31

    குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக்
    கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர்.
    வானம் ஊன்றிய மதலை போல,
    ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
    விண் பொர நிவந்த, வேயா மாடத்து
    இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
    உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
    துறை பிறக்கு ஒழியப் போகிக் கறை அடிக்
    குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
    வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த,
    மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பைத்
    தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்
    தாழ் கோட் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,
    வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்க்
    கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
    குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,
    திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,
    தீம் பல் தாரம் முனையின், சேம்பின்
    முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்
    மழை வீழ்ந்தன்ன மாத் தாட் கமுகின்
    புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய்,
    ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச்
    சோறு அடு குழிசி இளக, விழூஉம்
    வீயா யாணர் வளம் கெழு பாக்கத்துப்
    பல் மர நீள் இடைப் போகி, நல் நகர்,
    விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,
    வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
    நாடு பல கழிந்த பின்றை நீடு குலைக்
    காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
    பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:08:42(இந்திய நேரம்)