தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • பெரும்பாணாற்றுப்படை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   34

    இறை உறை புறவின் செங் கால் சேவல்,
    இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர்க்
    குண கடல் வரைப்பில் முந்நீர் நாப்பண்
    பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
    முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,
    வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
    இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சிக்
    கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,
    உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகிப்
    'பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்
    கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு,
    புலவர் பூண் கடன் ஆற்றிப் பகைவர்
    கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
    வென்றி அல்லது, வினை உடம்படினும்,
    ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கைக்
    கொண்டி உண்டித் தொண்டையோர் மருக!
    மள்ளர் மள்ள! மறவர் மறவ!
    செல்வர் செல்வ! செரு மேம்படுந!
    வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற
    பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டுத்
    துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
    தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி,
    வந்தேன், பெரும! வாழிய நெடிது!' என,
    இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பிக்
    கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,
    நின் நிலை தெரியா அளவை அந் நிலை
    நாவலம் தண் பொழில் வீவு இன்று விளங்க,
    நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
    அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
    பாசி அன்ன சிதர்வை நீக்கி,
    ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம்
    இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇக்
    கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
    வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை,
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:08:59(இந்திய நேரம்)