தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aganaanooru

அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   10


 

றை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங் கல்,
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின் - "அறத்தாறு
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக' என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டே கடிந்தனம், செலவே - ஒண்டொடி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)