தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Aganaanooru

அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   320


 

விறல்வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
கொள்ளை மாந்தரின் - ஆனாது கவரும்
புல்இலை மராஅத்த அகன்சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா-
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
 

என்பது முன் ஒரு  காலத்து, நெஞ்சினால் பொருள்  வலிக்கப்  பட்டுப்
பிரிந்தான், தலைமகன்;  பிரிந்து  இடைச்  சுரத்தினின்று  அவள் நலம்
நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப், பொருள் முடித்து வந்த
தலைமகன்,  பின்னும்  பொருள்  வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச்
செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்.
 

முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும்-குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்-
ஆய் தொடி அரிவை! - நின் மாண் நலம் படர்ந்தே.
 

என்பது  தலைமகட்கும்  பருவங்  காட்டி  வற்புறுத்தியது. - குறுங்குடி
மருதனார்

அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளி நிலை கொள்ளாள், தமியள், மென் மெல,
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்,
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்-
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு,
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங் கல்,
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின் - “அறத்தாறு
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக' என்னுநள் போல,
முன்னம் காட்டி, முக
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 17:32:35(இந்திய நேரம்)