தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananaru

புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   297

பொன்னாற்     செய்யப்பட்ட   வீரக்கழல்    புனைந்தகாலினையும்
பூசிப்புலர்ந்த     சந்தனத்தையுடைத்தாகிய    குறுக்ககன்ற    பரந்த
மார்பினையு    முடையோய்!    ஊரில்லாதனவும்,    பொறுத்தற்கரிய
உயங்குதலையுடையனவும்,  நீரில்லாதனவும்,  நீண்ட  வழியனவுமாகிய,
வம்பலரை     நலியச்   சேய்மைக்    கண்ணே   பார்த்திருக்கும்
இருப்பினையும்,  கையாற்கவிக்கப்பட்ட  கண்ணாற் குறித்துப் பார்க்கும்
பார்வையையும், செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய
மறவர்தாம்     அம்பை    விடுதலாற்    பட்டோரது  உடன்மூடிய
புதியகற்குவையின்மேலே     திருந்திய    சிறகினையும்    வளைந்த
வாயினையுமுடைய           பருந்திருந்து            வருந்தும்
உன்னமரத்தினையுடையவாகிய       அணுகுதற்கரிய      கவர்த்த
வழியின்கண்ணே நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்;
அங்ஙனம் வருவது,  அவர் மனக்குறிப்பை  அவர்
  முகத்தானறிந்து
அவருடைய   வறுமையைத்  தீர்த்தலை   வல்ல தன்மையான் -எ-று.
 

நுதலையும் திறலையும்  கடாத்தையும் மருங்கையும்  பெருங்கையையும்
உடைய  யானைப்பிடர்த்தலையிருந்து  எயிறுபடையாகஎயிற்கதவிடாக்
கூற்றத்து   அருந்தொழில்    சாயாப்பெரும்பெயர்வழுதியென மாறிக்
கூட்டுக:   காலாலடுதல்   (பி-ம். காலிலிடுதல்)   கையாலூக்குதலன்றி
எயிறு படையாக  எயிற்கதவிடக்கை  விடாத  பெருங்கையானையென
இயைத் துரைப்பினுமமையும்;
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 19:02:43(இந்திய நேரம்)