தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananaru

புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   533

நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே
எல்லா வுயிர்க்கு மேம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. 

கடவுள் வாழ்த்து. 

பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது.

இதன்  பொருள் - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணிகார்காலத்து
மலரும்  நறிய  கொன்றைப்பூ;  அழகிய நிறத்தையுடைய திருமார்பின்
மாலையும்  அக்  கொன்றைப்பூ;  ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு;
மிக்க  பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்றுசொல்லுவர்;
நஞ்சினது   கறுப்பு,   திருமிடற்றை   அழகு   செய்தலும்  செய்தது;
அக்கறுப்பு,   தான்  மறுவாயும்  வானோரை  உய்யக்கொண்டமையின்,
வேதத்தைப்   பயிலும்   அந்தணராற்  புகழவும்படும்;  பெண்  வடிவு
ஒருபக்கமாயிற்று;    ஆய   அவ்வடிவுதான்,   தன்னுள்ளே   ஒடுக்கி
மறைக்கினும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 19:26:27(இந்திய நேரம்)