Primary tabs

வருகின்ற பாண! கேட்பாயாக, நமது செல்வம் பட்ட நிலைமை: இனி
நீ அவன் நமக்கு விட்ட விளைநிலங்களைக் கைப்பற்றி
உண்பாயாயினும் அன்றி அவனோடுகூடி இன்புற்றிருந்த விடத்து
அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு
இரக்கக்கடவோமென்றெழுந்திருந்து வருத்தங்கொள் வாயாயினும்
இரண்டும் நினது கையகத்துள்ளன; மிக்க அணுமையையுடைய
ஊர்முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கட்டோன்றித் தன்னுடைய
ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்
எய்யப்பட்ட அம்பு (பி -ம். அப்பு) வெள்ளத்தைத் தன்துடியே
புணையாகவென்று பகைவரைக் கொன்று அவர்கொண்ட நிரையை
மீட்டு உலகம் தனிப்பச் சூழ்ந்துகொண்ட பாம்பினது கூரிய
பல்லினின்றும் பிழைத்துப்போந்த திங்களைப்போல மறவருடைய
கையினின்றும் பிழைத்துப்போந்த கன்றையுடைய பலவாகிய
ஆனிரையுடனே வந்த சொல்லையுடையனாய்த் தோலுரித்த
பாம்புபோலத் தான் ஒருவனுமேயாக அரிதாகச் செல்லப்படும்
தேவருலகத்தின்கட் போயினான்; அவனது உடம்பு, காட்டுட்
சிற்றியாற்றினது அரிய கரையிடத்துக் காலுற நின்று நடுக்கத்தோடு
சாய்ந்த இலக்கத்தையொப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது;
உயர்ந்த கீர்த்தி மிகவுந் தோன்றிய மறவன் பெயர் மென்மையமைந்த
மயிலினது அழகிய மயிராகிய பீலியைச் சூட்டப் பிறர்
இடங்கொள்ளப்படாத சிறிய விடத்துப் புடைவையாற் செய்யப்பட்ட

