Primary tabs

![]()
398 செல அருளியோனே
........................யருவிப் பாயல் கோவே.
திணை: பாடாண் திணை; துறை: கடைநிலை.
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
399 அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள்உலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீம்கனி நறும்புளி
மோட்டுஇரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத்து அன்ன
மெய்களைந்து இனனொடு விரைஇ ,.....
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்,
அழிகளின் படுநர் களிஅட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல்இசைக்
கிள்ளி வளவன் உள்ளி, அவற் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,
ஒருசிறை இருந்தேன்; என்னே! 'இனியே,
அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என,
மீப் படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,
வள் பரிந்து கிடந்த.......................மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து,
கடியும் உணவுஎன்னக் கடவுட்கும் தொடேன்,
'கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்
பகடே அத்தை யான்வேண்டி வந்தது' என
ஒன்றுயான் பெட்டா அளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன்பூத்து அன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கி யோனே; சீர்கொள
இழும் என இழிதரும் அருவி,
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.
திணை: அது; துறை:

