தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   7


கூறப்பட்டது.   பிறவிப்  பெருங்கடல்   நீந்துவர்   நீந்தார் இறைவன்
அடிசேரா  தார்.  இறைவன்  அடி  என்னும்  புணையைச் சேர்ந்தார்
பிறவி   ஆகிய   பெரிய   கடலை  நீந்துவர்;  அதனைச்  சேராதார்
நீந்தமாட்டாராய்     அதனுள்    அழுந்துவர்.    காரண   காரியத்
தொடர்ச்சியாய்   கரை  இன்றி  வருதலின்,  ''பிறவிப்  பெருங்கடல்''
என்றார்.  சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது
இறைவன்    அடியையே    நினைப்பார்க்குப்   பிறவி   அறுதலும்,
அவ்வாறன்றி  மாறி  நினைப்பார்க்குப்  அஃது  அறாமையும் ஆகிய
இரண்டும்  இதனான்  நியமிக்கப்பட்டன.  அஃதாவது,  அக்கடவுளது
ஆணையான்   உலகமும்,   அதற்கு  உறுதியாகிய  அறம்  பொருள்
இன்பங்களும்  நடத்தற்கு  ஏதுவாகிய  மழையினது சிறப்புக்  கூறுதல்.
அதிகார முறைமையும் இதனானே விளங்கும். வானின் றுலகம் வழங்கி
வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று. மழை இடையறாது நிற்ப
உலகம் நிலைபெற்று வருதலான்; அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம்
என்று  உணரும்  பான்மையை  உடைத்து.  ''நிற்ப'' என்பது  ''நின்று''
எனத்  திரிந்து  நின்றது. ''உலகம்'' என்றது ஈண்டு உயிர்களை. அவை
நிலைபெற்று  வருதலாவது  பிறப்பு  இடையறாமையின் எஞ்ஞான்றும்
உடம்போடு   காணப்பட்டு  வருதல்.  அமிழ்தம்  உண்டார்  சாவாது
நிலைபெறுதலின,்  உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை ''அமிழ்தம்
என்று   உணர்க''   என்றார்.   துப்பார்க்குத்   துப்பாய  துப்பாக்கித்
துப்பார்க்குத்  துப்பாய  தூஉம் மழை. உண்பார்க்கு நல்ல உணவுகளை
உளவாக்கி; அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம்
மழை.  தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு
உடைய  உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும்
இஃது ஒக்கும். இவ்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 00:17:54(இந்திய நேரம்)